2009-02-16 18:09:33

புலம் பெயர்வோர் நம் குடும்பத்தவர்களே, பேராயர் மார்க்கெட்டோ.1602


புலம் பெயர்வோர் நம் குடும்பத்தவர்களே , நாம் எல்லோரும் சமமே என்கிறார் பேராயர் மார்க்கெட்டோ . இடம் பெயர்வோரின் பிரச்சனைகள் பற்றி உரோமையில் சென்ற வெள்ளியன்று கருத்தரங்கு நடந்தது . உலகோதயமாகும் இந்த வேளையில் மனித மாண்பும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் கோண்ராட் அதேனார் தொண்டு நிறுவனம் சாண் எஜிடோ குழுவோடு இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தியது . பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ புலம் பெயர்ந்தோர் ,மற்றும் பயணியருக்கான வத்திக்கான் திருப்பீட மன்றத்தின் செயலர் . உலகோதயமாகி வரும் இக்காலக்கட்டத்தில் புலம் பெயர்ந்தோர் முக்கியமான சவாலை முன் வைப்பதாகக் கூறினார் பேராயர் மார்க்கெட்டோ . மனித இனம் , மொழி , தொடக்கம் இவற்றுக்கு அப்பால் நாம் அனைவரும் சகோதரர்களே என்பதன் அடிப்படையில்தான் மனித குல ஒற்றுமையை உண்டாக்க முடியும் என்றார். திருச்சபை புலம் பெயர்ந்தோர்மீது மிக்க கவனம் செலுத்தி உதவி புரியக் காத்திருக்கிறது என மேலும் கூறிய அவர், புலம் பெயர்வோர் இடம் பெயர்ந்து வாழ உரிமையுள்ளது எனவும் நாம் அவர்களுக்குக் செய்ய வேண்டிய கடமையும் , கொடுக்க வேண்டிய உரிமைகளும் உண்டு எனவும் பேராயர் வலியுறுத்தினார் .அனைத்து நாடுகள் ஒப்பந்தப்படி அரசுக்கள் தம் கடமைகளைச் செய்து புலம் பெயர்ந்து வரும் மக்களுக்கு எதிரான குற்றங்கள் புரிவோரைத் தண்டிக்க வேண்டும் எனவும் கூறினார் பேராயர் மார்க்கெட்டோ .








All the contents on this site are copyrighted ©.