2009-02-14 12:32:21

வழிபாட்டு ஆண்டின் 6 ஆம் ஞாயிறு, முதல் வாசகம். லேவி. 13,1-2,44-46.

2 ஆம் வாசகம். 1 கொரி.10, 31-11,1. நற்செய்தி மாற்கு 1,40-45 . 150209.


லேவி. 13 , 1-2, 44-46 .

1,ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது – 2,ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று , ஏதேனும் தடிப்போ , சொறி சிரங்கோ , வெண்படலமோ தோன்ற , அது தொழுநோயென ஐயமுற்றால் , அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டு வரப்படவேண்டும் .

44,அவர் தொழுநோயாளி . அவர் தீட்டுள்ளவர் . அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார் . ஏனெனில் நோய் அவர் தலையில் உள்ளது . 45,தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து , தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு , தீட்டு , தீட்டு , என குரலெழுப்ப வேண்டும் . 46,நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர் . எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார் .



முதல் கொரிந்தியர் 10, 31-, 11,1 .

நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீரகள் . நானும் அனைத்திலும் , அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன்தருவதை நாடாமல் , பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன் . நான் கிறிஸ்துவைப்போல் நடப்பது போன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள் .



மாற்கு 1, 40-45 .

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து , நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்று வேண்டினார் . இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக என்றார் . உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம் இதை யாருக்கும் சொல்ல வேண்டாம் , கவனமாய் இரும் . ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி , நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பிவிட்டார் . ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார் . அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை . வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள் .








All the contents on this site are copyrighted ©.