2009-02-14 12:53:58

பிப்ரவரி 15 புனித க்ளாத் லா கொலம்பியர் திருவிழா. 1641-1682 .


புனித மார்க்கரட் மரியிடம் திரு இருதய ஆண்டவர் தமது திரு இதயத்தைக் காண்பித்து மனுக்குலத்தின்மீது தாம் கொண்டுள்ள மட்டற்ற அன்பைப் பற்றியும் மனிதர்களின் நன்றியில்லாமை பற்றியும் வெளிப்படுத்தினார் . இக்காட்சிகளும் காட்சிகளின்போது தரப்பட்ட செய்திகளும் நம்பத்தக்கவை என்று சொல்லி உறுதிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட திருத்தூதர்தான் இயேசு சபைக்குரு க்ளாத் லா கொலம்பியர் .

இவர் 1641 இல் பிரான்சு நாட்டின் லயன்ஸ் நகரில் பிறந்தார் . 17 வயதில் இயேசு சபையில் சேர்ந்தார் . 33 வயதில் தமது இறுதி வார்த்தைப்பாட்டை அளித்தார். இரு மாதங்களுக்குப் பின்னர் பாரே லே மோனியால் என்ற இடத்தில் கல்லூரியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் . இக்கல்லூரிக்கு அருகில் இருந்த மினவின சபையில் சகோதரியாக வாழ்ந்த மார்கரட் மரிக்கு ஆன்ம காரியங்களில் வழிகாட்டியாக இருந்தார் . பின்னர் இங்கிலாந்தின் யார்க் நகரில் இருந்த பெருமகளுக்கும் அரச அவையில் உள்ளோருக்கும் மறைப் போதகராக அனுப்பப்பட்டார் . இந்தப் பெருமகள் பிற்காலத்தில் 2 ஆம் ஜேம்ஸ் மன்னரின் மனைவியானார் . ஆனால் இங்கே இவர் சிலருடைய குற்றச் சாட்டினால் சிறைப்படுத்தப்பட்டு மறைசாட்சியாக இறக்கவிருந்த வேளையில் பிரான்சு நாட்டு மன்னன் 14 ஆம் லூயிசின் குறுக்கீட்டால் காப்பாற்றப்பட்டார் . பின்னர் பாரேலே மோனியாலுக்கு வந்து 41 வயதில் காலமானார் . திரு இருதய ஆண்டவர் ஒருமுறை மார்க்கரட் மரியிடம் க்ளாத் கொலம்பியரை தம் நண்பர் எனக் கூறியிருந்தார் .








All the contents on this site are copyrighted ©.