2009-02-13 20:13:49

யூதர்களுக்கு எதிரான போக்குக்கு திருச்சபையில் இடம் இல்லை, திருத்தந்தை 1302


யூத குலத்துக்கு எதிரான போக்குக்கு திருச்சபையில் இடம் இல்லை எனத் திருத்தந்தை தெரிவித்துள்ளார் . இந்த வியாழனன்று அமெரிக்காவின் முக்கிய யூதகுல நிறுவனத் தலைவர்களை வத்திக்கானில் வரவேற்றுப்பேசினார் திருத்தந்தை . லெபேப்ரே ஆயர் ரிச்சார்டு வில்லியாம்சன் யூதர்கள் ஜெர்மனியின் விஷவாயுச் சிறையில் கொல்லப்படவில்லை எனக்கூறிய செய்தியும் , கிறிஸ்தவ ஐக்கியம் கருதி அவரை கத்தோலிக்கத் திருச்சபையில் ஏற்றுக் கொண்டதும் யூதமத மற்றும் கத்தோலிக்கத் திருச்சபையிடையே குழப்பத்தை உண்டுபண்ணியது . அதன் பின்னர் தாங்கள் யூதர்கள் பால் திருத்தந்தையும் வத்திக்கானும் கொண்டிருக்கும் நல்ல அபிமானத்தை பலமுறை எடுத்துக் கூறியுள்ளனர் . 2006 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் ஆஸ்ட்விச் சிறைச்சாலைக்குச் சென்றதை வியாழனன்று யூதத் தலைவர்களைச் சந்தித்தபோது திருத்தந்தை நினைவு கூர்ந்தார் . அந்தச் சிறைக்குச் சென்றபோது தாம் பட்ட மனவேதனையைத் திருத்தந்தை வெளிப்படுத்தினார் . அங்கு சிறைப்பட்ட மக்கள் பட்ட தாங்கமுடியாத துயரங்களை திருத்தந்தை நினைவுகூர்ந்தார் . மேலும் யூதர்களோடு திருச்சபைக்குள்ள 2000 வருட நல்லுறவு பற்றியும் திருத்தந்தை நினைவுகூர்ந்தார். யூதர்களுக்கு எதிரான போக்குகளை தடைசெய்வதில் திருச்சபையின் மாறாத ஆழமான , இரு சமூகத்தாரிடையேயும் முடிவில்லாத நல்ல உறவை வளர்க்கும் திட்டத்தையும் திருத்தந்தை எடுத்துக்கூறினார் . ஆஸ்ட்விச் சிறையில் நடந்த குற்றத்தை மறுப்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது எனவும் தெரிவித்தார் . அந்தப் பாதகச் செயல் வருங்காலத்தில் அவ்வாறு நடக்காதிருக்க நாம் கவனமாக இருப்பதற்கு ஓர் எச்சரிக்கை எனத் தெரிவித்தார் திருத்தந்தை .








All the contents on this site are copyrighted ©.