2009-02-12 19:29:34

“இராபர்ட் முகாபே பதவி நீங்க வேண்டும்”, ஆங்கிலிக்கன் திருச்சபை. 1202


இராபர்ட் முகாபே பதவி நீங்க வேண்டும் என ஆங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்துகிறது . ஆப்பிரி்காவின் ஜிம்பாவே நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் ஸ்வான்கிராய் தற்போது பிரதமராகப் பதவி ஏற்றுள்ளார் . ஆனால் குடியரசுத்தலைவர் இராபர்ட் முகாபே பதவி நீங்குவதே நாட்டின் பிரச்சனைக்களுக்குத் தீர்வு தரும் என ஆங்கிலிக்கன் சபையினர் கூறியுள்ளனர் . இவ்வாரம் எகிப்து நாட்டில் சந்திக்கும் ஆங்கிலிக்கப் பேராயர்கள் சென்ற ஆண்டு தேர்தலில் தோல்வியுற்ற முகாபே பதவி இறங்கவேண்டும் என வலியுறுத்திவருகின்றனர் . ஜிம்பாவே மக்களுக்கு தம் ஆதரவைப் பேராயர்கள் தெரிவித்துள்ளனர் . அங்கு நடக்கும் மனித உரிமை மீறல் , பசிப்பிணி , உயிர்ச்சேதம் , காலரா , மற்றும் சமுதாய வாழ்வு சீரழிதல் , பொருளாதாரப் பின்னடைவு ஆகியன பற்றி கவலை தெரிவித்த ஆயர்கள் தம்முடைய ஒத்துழைப்பை நல்குவதாகக் கூறியுள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.