அன்பர்களே, பிப்ரவரி 12 இவ்வியாழன் வத்திக்கான் வானொலி தொடங்கப்பட்டு 78 ஆண்டுகள் நிறைவு.
பிப்ரவரி 11 இப்புதன் வத்திக்கான் நாடு உருவாகி 80 ஆண்டுகள் நிறைவு. இதனையொட்டிய அருங்காட்சியகத்
திறப்பு, கருத்தரங்கு, போன்றவை இவ்வியாழக்கிழமை வத்திக்கானில் தொடங்கப்பட்டன. எனவே வத்திக்கான்
நாடு பற்றி வத்திக்கான் உச்சநீதிமன்ற நீதிபதி பேரருட்திரு முனைவர் லியோ ஆரோக்யராஜ் அவர்களிடம்
கேட்டோம். இவர், வத்திக்கானில் இப்பதவியை வகிக்கும் முதல் இந்தியர், முதல் தமிழராவார்.
இந்திய சட்டம் படித்த வழக்கஞர், திருச்சபை சட்டமும், வத்திக்கானின் உச்ச நீதிமன்ற சட்ட
அறிவியலும் படித்திருப்பவர்.