2009-02-12 19:21:34

குரோஷியாவில் முந்நாள் கம்யூனிச நாட்டு ஆயர்கள் அமர்வு .1202 .


முன்னர் கம்யூனிசம் ஆண்ட நாட்டின் 13 ஆயர்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் குரோதஷியாவில் இந்தப் புதன் முடிவடைந்தது.அதுபோது கம்யூனிசத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அதன் விஷத்தன்மையாலும், அது உண்டாக்கிய மனக் காயத்தாலும் இன்னும் அவதியுறுகிறார்கள் என்று கர்தினால் ஜோசப் போசானிக் கூறியுள்ளார் . முத்தி பெற்ற கர்தினால் ஸ்டெப்பினாக்கும் மற்ற மறைசாட்சியரும் கோதுமை மணி மண்ணில் விழுந்தால் பல மடங்கு பலன்தரும் என்பதைக் காட்டுகிறார்கள் என்று கூறினார் . பிரிவினைக்கும் , நொறுக்குதலுக்கும் , ஆணவத்துக்கும் கம்யூனிச இரும்புத்திரை எடுத்துக்காட்டாக இருந்து மனிதனும் மனிதனும் உறவு கொள்ளமுடியாமலும் , கடவுள் பக்கம் பார்வையைத் திருப்பமுடியாமலும் செய்ததாக மேலும் கூறினார் . விதை மண்ணில் வீழ்ந்தாலும் கடவுள் அதற்கு பல மடங்கு வாழ்வளிப்பார் எனக் கர்தினால் போசினாக் கூறியுள்ளார் . கம்யூனிசத்தின் தாக்கம் மனித வாழ்வை, முக்கியமாக குடும்ப வாழ்வைப் பாதிக்காவண்ணம் காக்க வேண்டும் என்றும் கர்தினால் போசானிக் அக்கருத்தரங்கில் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.