2009-02-11 20:41:32

“நோயுற்றோர் மனித குலச் செல்வங்கள்” ,அன்னை தெரசா சகோதரிகள்.1102.


அன்னை தெரசாவின் பிறரன்புச் சகோதரிகள் 1976 ஆம் ஆண்டிலிருந்து ஆஷா தான் என்ற பெயருடைய பிறரன்புச் சேவை மையத்தை மும்பையில் நடத்தி வருகின்றனர் . இதனை அன்னை தெரசாள் தொடங்கி வைத்தார்கள் . அனாதைகளையும் , உடல் மற்றும் மனத்தளவில் நலம் குன்றிய குழந்தைகளையும் எய்ட்ஸ் நோயாளிகளையும் அங்கு சிகிச்சை அளித்துக் கவனித்து வருகின்றனர் . இறக்கும் தருவாயில் கைவிடப்பட்டவர்களையும் மனித மாண்போடு இறையடி சேர அபயம் அளித்துப் பாதுகாத்து வருகின்றனர். அருள் சகோதரிகள் தங்களை ஆதரவற்றவர்களுக்காக அர்ப்பணித்து அன்பு , மரியாதை, மனித மாண்பை வழங்கி மனித வாழ்வு போற்றுதற்குரியது என்பதை செயல்பாட்டில் காட்டிவருகின்றனர் . பிப்ரவரி 11ஆம் தேதி உலக நோயுற்றோர் தினத்தையொட்டி அதற்கு முந்தைய நாள் வெளியிட்ட செய்தியில் ஆஷாதான் இல்லத்தில் 83 பேருக்கு தொண்டு புரிந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர் . அங்குள்ளவர்கள் 3 வயதிலிருந்து 15 வயதுவரை உள்ளவர்கள் . அங்குள்ள அருள் சகோதரி இன்பாண்டா ஒவ்வொரு உயிரும் எந்நிலையிலும் வாழ வழிசெய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்தக் குழந்தைகள் வாழ்வதற்காகப் பிறந்தவர்கள். அவர்கள் எங்களுக்கும் , சமுதாயத்துக்கும் இறை அருள் பாய்ந்து வரும் வாய்க்கால்கள் எனக் கூறுகிறார் அன்னை தெரசாள் சபையின் சகோதரி இன்பாண்டா.








All the contents on this site are copyrighted ©.