2009-02-10 16:28:55

ஆயிரக்கணக்கில் மக்கள் கீழை லூர்து திருத்தலத்தில் வாழ்வுக்காகச் செபிக்கின்றனர்


10பிப்.2009. நாளைச் சிறப்பிக்கப்படும் 17வது உலக நோயாளர் தினத்தை முன்னிட்டு, கீழை லூர்து என்றழைக்கப்படும் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு, சமய சமூக மற்றும் இனப்பாகுபாடுகளின்றி ஆயிரக்கணக்கில் மக்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர் என்று அத்திருத்தல அதிபர் குரு சேவியர் கூறினார்.

ஒரிசாவில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையிலும், இலங்கையின் சண்டையினாலும் ஏற்பட்டுள்ள காயங்கள் குணப்படுத்தப்பட பக்தர்கள் செபிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

வழக்கமாக உலக நோயாளர் தினம், குணமளிக்கும் ஆரோக்ய அன்னைத் திருத்தலத்தில் சிறப்பிக்கப்படுகிறது என்றுரைத்த குரு சேவியர், ஊனமுற்ற நிலையிலும், கருணைக்கொலை என்ற கருத்துக்கோட்பாட்டு நிலையிலும், மனித வாழ்வு எந்நிலையில் இருந்தாலும் அது வாழ்வதற்குத் தகுதியுடையது என்றார்.

மனித வாழ்வு விலைமதிப்பற்றது, அரசுகளும் அரசுகளும் உலகமயமாக்கப்பட்ட சமூகங்களும் மரணக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் போது நாம் அதற்கு எதிராய்ப் போராடுவதற்கு உலக நோயாளர் தினமானது நம்மைத் தூண்ட வேண்டும் என்றார் வேளாங்கண்ணி திருத்தல அதிபர் குரு சேவியர்.








All the contents on this site are copyrighted ©.