2009-02-07 12:56:26

கென்ய அரசின் ஊழல் மற்றும் திறமையற்ற நிர்வாகத்தால் ஒருகோடிக்கு மேற்பட்ட மக்கள் பசிக்கொடுமையை எதிர்நோக்குவார்கள், கர்தினால் ஜான்


07பிப்.2009. கென்ய அரசின் ஊழல் மற்றும் திறமையற்ற நிர்வாகத்தால் ஒருகோடிக்கு மேற்பட்ட மக்கள் பசிக்கொடுமையை எதிர்நோக்குவார்கள் என்ற எச்சரிப்பை முன்வைத்தார் அந்நாட்டு ஆயர் பேரவைத்தலைவர் கர்தினால் ஜான் நுயெ.

கென்யாவின் பல பகுதிகளில் போதுமான மழை இல்லை என்பதை ஏற்கும் அதேவேளை, பேராசை, தன்னலம், ஆகியவற்றை களைவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.

ஊழல் கலாச்சாரத்தை அறுத்து எறிவதற்கு அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் எந்த மனிதரின் வாழ்வும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகாது, யாரும் பசிக் கொடுமையை எதிர்நோக்கமாட்டார்கள் என்றும் கர்தினால் நுயெ கூறினார்.

கென்ய அரசின் கணிப்புப்படி ஒருகோடிக்கு மேற்பட்ட மக்கள் பசிக்கொடுமையை எதிர்நோக்குகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.