2009-02-06 17:26:23

காசாப்பகுதிக்கு உதவிகளைக் கொண்டு சென்ற கப்பல் வழிமறிப்பு.0602


காசாப்பகுதிக்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டு சென்ற கப்பலை வழிமறித்து செயற்பொறியாளர்களை வெளியேற்றியுள்ளது இஸ்ராயேல் . திட்டச் செயலாளர்கள் 10 பேர் ஐ. நாடுகள் சபை அனுப்பிய பொருள்களோடு லெபனான் இஸ்ராயேல் எல்லையைக்கடந்து நாக்கோரா நகரை நோக்கிச் செல்லும்போது தடுக்கப்பட்டனர் . அவர்களில் 9 பேர் லெபனானைச் சேர்ந்தவர்கள் , ஒருவர் பாலஸ்தீனத்தவர் . அவர்களுள் 86 வயதுடைய கிரேக்கக் கத்தோலிக்க ஆயர் ஹிலேரியன் கப்புச்சியும் ஒருவர் . கப்பலில் ஹமாஸ் போராளிகளுக்கு போர்த்தளவாடங்களைக் கொண்டு செல்லவதாகச் சந்தேகப்பட்டு கப்பலைச் சோதனையிட்டனர் . அக்கப்பலில் தண்ணீர் , மருந்து மற்றும் உணவுப் பொருள்களே இருந்தன . கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் லெபனானுக்கும் வேறு இடங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.