2009-02-05 16:10:17

இரஷ்யப்பிதாப்பிதாவுக்கு துருக்கியின் முதலாம் பர்த்தோலேமேயு வாழ்த்து.0502


இரஷ்யாவின் மாஸ்கோ ஆர்த்தோடாக்ஸ் பிதாப்பிதா மெட்ராபாலிட்டன் கிரில்லின் தேர்வுக்கு துருக்கியின் எக்கியூமெனிக்கல் பிதாப்பிதா முதலாம் பர்த்தலோமேயு மகிழ்ச்சி தெரிவித்து செய்தி வழங்கியுள்ளார் . முதலாம் பர்த்தலோமேயு இது பற்றிக் கருத்துக் கூறுகையில் ஆர்த்தோடாக்ஸ் திருச்சபை இதுநாள் வரை காத்திருந்த கலந்து பேசுதல் ஆர்த்தோடாக்ஸ் மன்றத்தில் இனித் தொடரும் எனத் தெரிவித்துள்ளார் . இன்றைய உலகை எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி மாஸ்கோப் பிதாப்பிதா கிரில்லுக்கு செய்தி அனுப்பியுள்ளார் . அன்னையாகிய திருச்சபை கொண்டிருக்கும் கனவுகளை நனவாக்க சரியான நேரத்தில் மெட்ராபாலிட்டன் கிரில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக துருக்கியின் பிதாப்பிதா தெரிவித்துள்ளார் . மாஸ்கோவின் பிதாப்பிதா திருச்சபைப் பணியில் அனுபவம் மிக்கவர் எனவும் , ஞானம் மிக்கவர் எனவும் கிறிஸ்தவ ஒற்றுமைக்காக அதிகம் முயற்சிகள் எடுப்பவர் என்றும் கூறியுள்ளார் துருக்கியின் பிதாப்பிதா முதலாம் பர்த்தலோமேயு .








All the contents on this site are copyrighted ©.