2009-02-05 16:15:02

இங்கிலாந்து தேசியத் திருமண வாரத்தைக் கொண்டாடுகிறது .0502


இம்மாதம் 7 தேதியிலிருந்து 14 தேதி வரை இந்த விழாக் கொண்டாடப்படுகிறது . மண ஒப்பந்தத்தைத் கொண்டாடுதல் என்பது மையக் கருத்தாக இருக்கும் . குடும்பங்கள் சமுதாயத்துக்குத் திடத்தன்மையைக் கொடுக்கின்றன எனக் கூறப்பட்டுள்ளது . இதுபற்றி இங்கிலாந்தின் கத்தோலிக்க ஆயர்குழுவின் திருமணம் மற்றும் குடும்ப வாழ்வு மன்றத்தின் தலைவர் ஆயர் ஜான் ஹைன் செய்தி வெளியிட்டுள்ளார் .அவரது செய்தியில் திருமண வாழ்வு நாம் நினைப்பதை விட சிக்கலானது. எனவே சமுதாயம் மணவாழ்வுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் . இடையூறுகள் வரும்போது ஒத்த எண்ணமுடைய குடும்பங்கள் சவால்களைச் சந்திக்க உதவ வேண்டும் எனக் கூறியுள்ளார். திருச்சபையில் இயங்கி வரும் திருமண உதவி மையங்கள் இதற்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் . நலமான மணவாழ்வு எல்லோருக்கும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தரும் என ஆயர் ஜான் ஹைன் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.