2009-02-02 20:06:32

சிறையிலிருக்கும் மியான்மர் நாட்டு ஆங் சான் சூ கீ , ஐ .நா. அதிகாரியைச் சந்தித்தார் . 020209 .


மக்கள் ஆட்சிக்காகப் போராடும் ா

ஆங் சான் சூ கீ ஒரு மணி நேரம் தமது வீட்டுக் காவலிலிருந்து வெளியே சென்று ஐ.நா அதிகாரி இப்ராஹிம் காம்பாரியைச் சந்தித்தார் . அவர்களது பேச்சுவார்த்தை அரசு கட்டிடத்திலேயே நடந்தது . அவர் ஐ . நா சபை அதிகாரியை அரசியல் காரணத்துக்காகச் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க இராணுவ அரசோடு பேசி ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் . 1991 இல் அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற ஆங் சூ கடந்த 19 ஆண்டுகளில் 13 ஆண்டுகளை வீட்டுக்காவலில் செலவிட்டுள்ளார் . ஜனவரி மாதம் 31 இல் ஐ.நா அதிகாரி இப்ராஹிம் பர்மாவின் வெளியுறவு அமைச்சரைச் சந்தித்தபோது அரசியல் கைதிகளாக இருக்கும் 2000 கைதிகளை விடுவிக்குமாறு கூறியுள்ளார் . மக்கள் நலம் கருதி பொருளாதார முன்னேற்றத்துக்குத் திட்டமிடுமாறு அரசிடம் பரிந்துரைத்துள்ளார் . ஆட்சியிலிருக்கும் இராணுவ ஆட்சியாளர் ஆங் சான் சூவுடன் கலந்துரையாடலைத் தொடருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.