2009-01-30 17:14:04

இறையியல் மன்றத்தின் உறுப்பினர்களை வரவேற்றார் திருத்தந்தை.3001


30 ஜனவரி இந்த வெள்ளிக்கிழமை காலை அகில உலக இறையியியல் மன்றத்தின் கத்தோலிக்க மற்றும் கீழை ஆர்த்தோடாக்ஸ் திருச்சபைகளின் உறுப்பினர்களை வரவேற்றுப்பேசினார் திருத்தந்தை . 35 பேர் ஒரு வாரமாக இந்தச் சமயக் கலந்து உரையாடலில் கலந்து கொண்டு கருத்துப் பறிமாறினர் . கிறிஸ்துவின் திரு உடலாகிய திருச்சபையில் ஒப்புரவுக்கும் ஒற்றுமைக்கும் வழிகளை ஆராய்ந்த மன்ற உறுப்பினர்களை திருத்தந்தை பாராட்டி வாழ்த்துக் கூறினார் . இந்தக் கலந்து உரையாடலால் திருச்சபைகள் தத்தமது சமயத்தின் வளப்பத்தைப் பகிர்ந்து கொண்டு பிரிவினைகளை நீக்க முயற்சிகள் செய்து கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதில் நம் ஒற்றுமை நமக்கு உறுதியளிக்க வேண்டும் எனத் திருத்தந்தை கருத்து வழங்கினார் . மத்தியக் கிழக்கு நாடுகளில் சமுதாயம் பிரிவினை காரணமாக , மோதல்கள் காரணமாகக் காயப்பட்டுத் துன்புறுகிறது . அங்கு நம்பிக்கை ஒளி ஏற்றப்படவேண்டும் எனத் திருத்தந்தை கூறினார் . திருத்தூதர் பவுல் அனைவருக்கும் தெரியும்படியான கிறிஸ்துவின் சீடர்களின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டார் . அவருடைய பரிந்துரையால் கடவுளின் அருள் உங்கள்மீதும் , உங்கள் சபையின் உறுப்பினர்கள் அனைவர்மீதும் பொழியப்படுவதாக என தம் ஆசியை திருத்தந்தை வழங்கினார் .








All the contents on this site are copyrighted ©.