2009-01-29 08:26:14

ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறித்தவ சபையின் புதிய தலைவருக்கு தன் வாழ்த்தை வெளியிட்டுள்ளது திருப்பீடத்தின் கிறித்தவ ஐக்கிய மேம்பாட்டிற்கான அவை.


ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறித்தவ சபையின் புதிய தலைவராக பேராயர் கிரில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதற்கு தன் வாழ்த்தை வெளியிட்டுள்ளது திருப்பீடத்தின் கிறித்தவ ஐக்கிய மேம்பாட்டிற்கான அவை.

62 வயதாகும் புதிய பிதாப்பிதா கிரில், பிப்ரவரி மாதம் முதல் தேதி ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறித்தவ சபையின் தலைவராகப் பொறுப்பேற்பார்.

ஏற்கனவே புதிய பிதாப்பிதா கிரில்,ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறித்தவ சபையின் கிறித்தவ ஐக்கியத்திற்கான அவையின் பொறுப்பாளராக இருந்தபோது திருத்தந்தை 16ம் பெனடிக்டை 2005, 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் சந்தித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.