2009-01-29 19:39:59

பிறவியிலேயே நாம் எல்லோரும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் என்கிறார் வத்தி்கான் அதிகாரி .290109 .


இவ்வாரம் வியாழன் காலை வத்திக்கான் திருப்பீடத்தின் வானிலை ஆராய்ச்சிக்கூட அதிகாரிகள் ஒன்று கூடி 2009 ஆம் ஆண்டை வானிலை ஆராய்ச்சி ஆண்டாகக் கொண்டாடப்படுவது பற்றிக் கருத்துப் பகிர்ந்தனர் . முதன்முதலாக கலிலேயோ கலிலேயி என்ற அறிவியலார் தொலை நோக்குக் கருவி வழியாக வானிலை ஆராய்ச்சி நடத்தினார் . அதன் 400 ஆம் ஆண்டு விழாவை நாம் இந்த ஆண்டு கொண்டாடுகிறோம் . வானிலையின் உலகளாவிய பயன்கள் பற்றிச் சிந்திக்கும் ஆண்டாக இந்த ஆண்டின் கொண்டாட்டங்கள் நடைபெறும் என வத்திக்கான் வானிலை மன்ற அதிகாரி இயேசு சபையின் தந்தை ஜோஸ் கபிரியேல் பூனஸ் கூறியுள்ளார். உலகத்தில் நம்முடைய இடத்தை நாம் சிந்தித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்வதும் இவ்வாண்டு விழாவின் நோக்கமாகும் . நாம் வானிலை ஆராய்ச்சியால் பெற்ற பயன்களைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும் . இவ்வாண்டின் ஆண்டவரின் திருக்காட்சி விழாவின் போது திருத்தந்தை பகுத்தறிவைப் புறக்கணிக்காமலும் , இறை நம்பிக்கைக்கு தடையில்லாமலும் நாம் வானத்தை அளப்போம் எனக் கூறியிருந்தார் . இவ்வாறு இரண்டையும் இணைத்து பயனுள்ள முறையில் வானிலையை ஆராய்வதற்கு முயல்வதாக வத்திக்கான் வானிலை ஆராய்ச்சிக் கூடத்தின் தலைவர் இயேசு சபையின் தந்தை ஜோஸ் கபிரியேல் பூனஸ் தெரிவித்தார் .








All the contents on this site are copyrighted ©.