2009-01-28 18:10:49

திருத்தந்தையின் மறைபோதகம் . – 28 ஜன. 09 .


இன்றைய மறைபோதகம் முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுல் அரங்கத்தில் இருந்தது .

வந்தவர்களை வாழ்த்தி வரவேற்றார் திருத்தந்தை .

இன்று திருத்தூதர் பவுல் அவருடைய சீடர்கள் திமோத்தேயு , தீத்து ஆகியோருக்கு எழுதிய மடல்கள் பற்றி மறைபோதகம் வழங்கினார் .

அம்மடல்களை எழுதியது யார் என்ற கேள்வி எழுந்தாலும் , கருத்துக்கள் பவுலுடைய அதிகாரத்தில் , அவருடைய போதனைகள அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன . திருத்தூதர்கள் வழிவந்த நற்செய்திக்கு வரக்கூடிய சவால்களை நற்செய்தியை ஊன்றிப் பயில்வதாலும் , விசுவாசத்தில் பிரமாணிக்கமாக இருப்பதாலும் எதிரிகளை வெல்லமுடியும் எனப் பவுல் அறிவுரை வழங்குகிறார் . பாரம்பரிய மரபுவழிச் செய்தியும் , விவிலியத் திருநூலும் திருச்சபையின் அடித்தளம் கடவுளால் அமைக்கப்பட்டது என்பதற்கு சான்றாக இருப்பதாக பவுல் கூறுகிறார் . இதுவே திருச்சபையின் போதனைக்கும் சான்றாக அமைந்து கடவுளின் மீட்பளிக்கும் நற்செய்தியை அறிவிக்கக் கூறுகிறது என்கிறார் பவுல் . ஆயர்களுக்கு வரையப்பட்ட இம்மடல்கள் திருச்சபையின் ஆளுமை அமைப்புப் பற்றிய வளர்ச்சியைக் காட்டுகின்றன . கடவுள் பணியாளர்களுக்குள் ஆயரின் தலைமைத்துவம் பற்றித் தெரிவிக்கின்றன . கடவுளின் குடும்பத்தை மனித மொழியில், ஆயர் என்பவர் குடும்பத்தின் தந்தையாக இருப்பதாகக் காட்டுகிறது . இந்த மடல்களின் அடிப்படையில் கடவுளுடைய குடும்பத்தின் உறுப்பினர்களாக அனைத்துக் கிறிஸ்தவர்களும் வாழவும் , ஆயர்கள் உறுதியாகவும் , பாசமிகு தந்தையர்களாகவும் இருப்பதற்காகவும், அவர்கள் திருச்சபையைக் கட்டி எழுப்பி தம் மந்தையை விசுவாசத்திலும் , ஒருமைப்பாட்டிலும் வளர்க்கவும் திருத்தூதர் பவுல் பரிந்துரைக்குமாறு மன்றாடுவோம் எனக் கூறி வந்திருந்த அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .

 








All the contents on this site are copyrighted ©.