2009-01-27 16:46:26

தாவோஸ் சர்வதேச பொருளாதார மாநாட்டில் ஏழைகள் மறக்கப்பட்டுவிடக்கூடாது, சர்வதேச காரித்தாஸ் நிறுவனப் பொதுச் செயலர்


27ஜன.2009. உலகின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளில் ஏழைகள் மறக்கப்பட்டுவிடக்கூடாது என்று சர்வதேச காரித்தாஸ் நிறுவனப் பொதுச் செயலர் லெஸ்லெ ஆன் நைட் அழைப்புவிடுத்தார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோசில் நாளை தொடங்கும் சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்கள் மற்றும் கொள்கை அமைப்பாளர்களுக்கு இவ்விண்ணப்பத்தை முன்வைத்தார் ஆன் நைட்.

பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஐந்து நாள் பொருளாதார மாநாட்டில் இன்னும் எண்பது ஆண்டுகளில் உலகப் பொருளாதார நெருக்கடிகளைக் களைவது குறித்து விவாதிக்கப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார பிரச்சனையினால் 2015க்குள் உலகில் ஏழ்மையைப் பாதியாகக் குறைப்பதற்கான ஐ.நா.வின் மில்லேனேய இலக்குகள் பாதிக்கப்படும் என்ற கவலையையும் ஆன் நைட் தெரிவித்தார்.

சர்வதேச காரித்தாஸ் நிறுவனமானது 162 தேசிய கத்தோலிக்க காரித்தாஸ் பிறரன்பு அமைப்புகளின் கூட்டமைப்பாகும்.








All the contents on this site are copyrighted ©.