2009-01-27 16:44:27

குடியேற்றதாரர்கள் எப்பொழுதும் மனிதனுக்குரிய மாண்புடன் நடத்தப்பட பேராயர் மர்க்கெத்தோ அழைப்பு


27ஜன.2009. குடியேற்றதாரர்கள் எப்பொழுதும் மனிதனுக்குரிய மாண்புடன் நடத்தப்படுமாறு குடியேற்றதாரருக்கான மேய்ப்புப்பணி நலன் குறித்த திருப்பீட அவையின் செயலர் பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோ கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு சான் தியெகோ பல்கலைகழகத்தில் சமயம், குடியேற்றம் மற்றும் தேசிய தனித்துவம் என்ற தலைப்பில் இன்று உரையாற்றிய பேராயர் மர்க்கெத்தோ, குடியேற்றதாரரைக் கட்டுப்படுத்தும் விடயங்களில்கூட குடியேற்றதாரர்கள் வந்திறங்கும் நாடுகள் சர்வதேச பொதுநலன் கோட்பாடுகளைப் புறக்கணிக்கக் கூடாது என்றார்.

குடியேற்றதாரர்கள் தாங்கள் குடியேறும் நாடுகளின் மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கற்பதற்கு முன்வருமாறு அவர் வலியுறுத்தினார்.

அதேசமயம், குடியேற்றதாரர்களின் கலாச்சார நடவடிக்கைகளும் மதிக்கப்படுமாறும் கேட்டுக் கொண்ட பேராயர், கலாச்சாரங்களுக்கிடையே உரையாடல் இடம்பெறுமாறும் அழைப்புவிடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.