2009-01-26 14:59:40

கருக்கலைப்புக்கான நிதி உதவியை அனுமதிக்கும் ஒபாமாவின் செயலுக்குத் திருப்பீடம் கண்டனம்


26ஜன.2009. வெளிநாடுகளில் கருக்கலைப்புக்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்க நிதி உதவியை தடுத்து வைத்திருந்த சட்டத்தை மாற்றி நிதி உதவியை அனுமதிக்கும் புதிய அதிபர் பராக் ஒபாமாவின் செயல் குறித்து தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

திருப்பீடத்தின் வாழ்வுக்கான கழகத்தின் தலைவர் பேராயர் ரீனோ பிசிகெல்லா இத்தாலிய பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கருக்கலைப்புக்கான கதவு திறக்கப்பட்டுள்ளதன்வழி மனிதவாழ்வை அழிப்பதற்கான பாதைத் திறந்துள்ளது என்றார்.

ஒருவரிடம் அதிகாரம் இருப்பதால் மட்டுமே வாழ்வையும் சாவையும் தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமை உள்ளது என எவரும் எண்ணிவிடக்கூடாது என்றார் பேராயர்.

கருக்கலைப்புக்கு உதவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வது கடந்த எட்டாண்டுகளாக அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரத்தில் அத்தடையை நீக்கி கையெழுத்திட்டுள்ளார் புதிய அதிபர் ஒபாமா.

 








All the contents on this site are copyrighted ©.