2009-01-26 15:00:59

ஈராக் கிறிஸ்தவர்களின் துன்பநிலைகள் குறித்த சமூகத் தொடர்பின் மௌனம் குறித்து மத்திய கிழக்கு ஆயர்கள் கவலை


26ஜன.2009. ஈராக் வாழ் கிறிஸ்தவர்களின் துன்பநிலைகள் குறித்து சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவிலான மௌனம் காக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஆயர்கள் குறை கூறியுள்ளனர்.

ஐந்தாண்டிற்கொருமுறை உரோம் நகருக்கென ஆயர்கள் மேற்கொள்ளும் அட் லிமினா சந்திப்பையொட்டி உரோம் வந்திருந்த ஈராக் ஆயர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் ஈராக்கிலிருந்து போர் காரணமாக வெளியேறும் கிறிஸ்தவர்களைத் தடுக்க இயலா நிலையில் இருப்பதாகவும் ஈராக் வாழ் கிறிஸ்தவர்களின் துன்பநிலைகள் குறித்து உலகம் மறந்துவிடக்கூடாது எனவும் தெரிவித்தனர்.

கடந்த பல ஆண்டுகளாக ஜனநாயகத்திற்கான ஏக்கமுடன் சென்று கொண்டிருக்கும் ஈராக்கில் கிறிஸ்தவர்கள் தங்கள் வருங்காலம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த அச்சமுடன் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

2003ம் ஆண்டில் ஈராக் மக்கட்தொகையான 2 கோடியே 50 இலட்சத்தில் எட்டு இலட்சமாக கிறிஸ்தவர்களின் எண்ணஇக்கையில் தற்போது பாதிப்பேர் தங்கள் குடியிருப்புக்களைவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.












All the contents on this site are copyrighted ©.