2009-01-24 14:54:55

குவாத்தமாலாவில் 2008ம் ஆண்டில் அதிக வன்முறைகள் இடம் பெற்றன, மனித உரிமைகள் ஆர்வலர்


ஜன.24,2009. மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலா எதிர்கொள்ளும் மேய்ப்புப்பணி சவால்களையும் அந்நாட்டின் நிலைமைகளையும் விளக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளது அந்நாட்டு ஆயர் பேரவை.

மேலும், குவாத்தமாலா நாட்டில், அநீதி, ஏழ்மை, சமத்துவமின்மை, பாகுபாடு, தனிமைப்படுத்தப்படல் போன்ற துன்பங்கள் தொடர்ந்து காணப்படுவதாக மனித உரிமைகளுக்கான அந்நாட்டு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் ஜெர்ஜோ மொராலெஸ் கூறினார்.

மொராலெஸ் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், குவாத்தமாலா வரலாற்றில் 2008ம் ஆண்டில் அதிக வன்முறைகள் இடம் பெற்றன என்றும், அவ்வாண்டில் 6292 பேர் கொலை செய்யப்பட்டனர். இவர்களில் 11 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் கூறியுள்ளார்.

ஒருநாளைக்கு சுமார் 17 பேர் வீதம் கொல்லப்பட்டனர் எனவும், குவாத்தமாலா நகரில் வாழ்வோரில் ஏறத்தாழ 25 விழுக்காட்டினர் மனிதாபிமானமற்ற நிலைகளில் உள்ளனர் என்ற கர்தினால் ரொடோல்போ கெசாதாவின் கூற்றையும் அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குவாத்தமாலாவின் ஏறத்தாழ ஒரு கோடியே முப்பது இலட்சம் மக்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் வறுமையில் வாடுகின்றனர். இந்நிலையை அகற்றாமல் நாட்டில் அமைதியைக் கொண்டுவர முடியாது என்ற கர்தினால் கெசாதாவின் கூற்றை அவர் மேலும் குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.