2009-01-24 14:51:24

இலங்கையில் கடும் போர் இடம் பெறும் பகுதிகளில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் பாதுகாக்கப்பட ஆயர்கள் அழைப்பு


ஜன.24,2009. இலங்கையில் கடும் போர் இடம் பெறும் பகுதிகளில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் பாதுகாக்கப்படுமாறு அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை அரசுத்தலைவர் மகிந்த ராஷபக்சேவுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளது.

போர் இடம் பெறும் பகுதிகளில் அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கு அரசு கொண்டுள்ள அக்கறையை பாராட்டும் அதேவேளை, மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் சண்டை நடக்கின்றது எனவும் அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வு தொடர்ந்து அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது எனவும் ஆயர்களின் கடிதம் கூறுகிறது.

அப்பாவி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்கு அரசு உதவுமாறும், அந்நாட்டு ஆயர் பேரவை தலைவர் கண்டி ஆயர் வியான்னி பெர்னாண்டோ கையெழுத்திட்டுள்ள அக்கடிதம் அழைப்புவிடுத்துள்ளது.

இதற்கிடையே, இலங்கையின் வடக்கே முல்லைத்தீவை அண்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நடக்கும் கடும் மோதல்களால் பொது மக்களுக்கு உயிரிழப்புக்களும் பெரும் சிரமங்களும் ஏற்பட்டு வரும் நிலையில் அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை இருதரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என்று முல்லைத்தீவு அரசு அதிபர் இமல்டா சுகுமார் கேட்டுக் கொண்டார்.

 








All the contents on this site are copyrighted ©.