2009-01-23 18:17:43

திருச்சபையை உலகம் போற்றுவதாகக் கூறுகிறார் கர்தினால் பெர்த்தோனே. 2301.


கத்தோலிக்க மதம் பற்றிய கேள்விகளுக்குப் பதில் கூறுகிறார் வத்திக்கான் திருப்பீடச் செயலர் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே . குடும்ப வாழ்வு பற்றிய அகில உலக 6 ஆவது மாநாட்டுக்காக வத்திக்கானின் பிரதிநிதியாகக் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே மெக்சிக்கோவுக்குச் சென்றிருந்தார் . சென்ற ஞாயிறன்று கருத்தரங்கு முடிவடைந்தது . இத்திங்களன்று மெக்சிக்கோவின் ஆயர்கள் குழு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு இறை நம்பிக்கையில் பகுத்தறிவின் நிறைவு என்ற தலைப்பில் உரை வழங்கினார் .

கேள்வி நேரத்தில் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுகிறவர்கள் பாலின நன்னெறிகளைப் பின்பற்றி வாழ்வதில்லை, எனவே கிறிஸ்தவ சமயம் சிக்கலில் இருப்பதாகக் கூறப்பட்டது . 177 நாடுகளோடு வத்திக்கானின் செயலர் என்ற முறையில் தொடர்புடைய கர்தினால், திருச்சபை சிக்கலில் இருப்பதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்றார் . திருச்சபை மிகவே எங்கும் பாராட்டப்படுவதாகவும் , முக்கியமாக கல்வி நிறுவனங்கள் இஸ்லாமிய நாடுகளில் மிகவும் போற்றப்படுவதாகவும் தெரிவித்தார் . சமயக்கோட்பாடுகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது அவசியம் எனத் தெரிவித்த கர்தினால் பெர்த்தோனே, பங்குத் தளங்களில் இதற்கான பணிகள் நிறையக் காத்திருப்பதாகக் கூறினார் .








All the contents on this site are copyrighted ©.