2009-01-23 18:25:59

ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையோடு கத்தோலி்க்க உறவு வலுக்கிறது. 230109.


உரோமையும் மாஸ்கோத்திருச்சபையும் உறவுகளில் நெருக்கமடைந்து வருவதாகக் கூறுகிறார் வத்திக்கான் அதிகாரி .

இயேசு சபையைச் சேர்ந்த அருள் தந்தை மிலான் ஜூஸ்ட் வத்திக்கான் திருப்பீடத்தின் கிறிஸ்தவ ஐக்கிய மன்றத்தில் உறுப்பினராக உள்ளார் . ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையோடும் கீழைத் திருச்சபையோடும் நல்லுறவுகளுக்கு அவர் வத்திக்கானின் தொடர்பாளராக இருக்கிறார் . வத்திக்கான் நாளிதழ் லொஸ்வர்த்தாரே ரொமானோவுக்கு அவர் செய்தி வழங்கியுள்ளார் . உறவுகளை வலுப்படுத்த நேரடித் தொடர்பே நல்ல பயன்தரக்கூடியது என அவர் தெரிவித்தார் . ஒருவர் ஒருவரை நம்ப வேண்டும் எனவும் தெரிவித்தார் . சென்ற ஆண்டு மே மாதம் கர்தினால் வால்ட்டர் கஸ்பாரோடு மாஸ்கோ சென்றிருந்த தந்தை மிலான் ஜூஸ்ட் அந்தப் பயணம் மிக முக்கியம் வாய்ந்தது என்றும் , அதுபோது ரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையின் ஆன்மீக , கலாச்சாரச் செல்வங்கள் பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது என்றும் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.