2009-01-22 13:22:39

ஜனவரி 23 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


1350 – ஸ்பானிய மறைபோதகரான புனித வின்சென்ட் பெரெரர் பிறந்தார்.

1556 - சீனாவின் சாங்சி மாநில நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 8,30,000 பேர் இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் உயிரிழந்த நிலநடுக்கம் இதுவாகும்

1639 - பெருவைச் சேர்ந்த யூதக் கவிஞர் பிரான்சிஸ்கோ மல்டொனால்டோ டி சில்வாவுக்கு எரியூட்டிக் கொலை செய்யும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

1809 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வீர் சுரேந்திர சாய் பிறந்தார்.

1873 - ஆன்மீகவாதியான இராமலிங்க அடிகள் இறந்தார்

1897 - இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தார்.

1950 - இஸ்ரேலின் அரசியலமைப்பு அவையான நெசெட் எருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது.

1957 - சென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது

1978 – ஓசோன் வாயுமண்டலத்தை சேதப்படுத்துவதாக நம்பப்படும் தூசுப்படலத்தைக் கட்டுப்படுத்தும் செயலில் உலகில் முதல் நாடாக சுவீடன் இறங்கியது.

ஜனவரி 23 புனித அருளப்பர் விழா. இவர் ஆயரான பின் அலெக்ஸாந்திரியாவிலுள்ள ஏழைகளைக் கணக்கெடுத்தார். கோவிலிலிருந்த எண்பதாயிரம் தங்க நாணயங்களை ஏழைகளுக்குக் கொடுத்தார். இவர் ஏழைகளைத் தம் எஜமானர் என்று அழைப்பார். தனக்கு கிடைத்த போர்வையை விற்று அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்தார். மேலும், இந்நாளில் கன்னியும் மறைசாட்சியுமான புனித எமரென்சியா விழாவுமாகும்.








All the contents on this site are copyrighted ©.