2009-01-22 19:10:09

காஜாப் பகுதியில் ஹாமாஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல். 220109 .


காஜாப் பகுதி போருக்குப் பிறகு இஸ்ராயேல் படை திரும்பிச் சென்றதும் ஹாமாஸ் தீவிரவாதிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது கிறிஸ்தவர்களுக்கும் மிதமான முஸ்லிம்களுக்கும் கலக்கத்தைத் தந்துள்ளது .காஜாவில் டிசம்பர் 27 தொடங்கிய மோதல் ஜனவரி 18, 19 தேதிகளில் இருதரப்பாலும் நிறுத்தப்பட்டது . ஹமாசின் இடங்களை அழிப்பதில் இஸ்ராயேல் வெற்றி பெறவில்லை என அங்குள்ள ஒருவர் கூறியுள்ளார் . அங்கு ஹமாசைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிகளோடு அலைந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது . அவர்கள் வசமே காஜாப் பகுதி உள்ளதாகவும் கூறப்படுகிறது . இஸ்ராயேலை அழிப்பதாகக் கூறிக்கொண்டிருக்கும் ஹமாஸ் எகிப்து நாட்டோடு சுரங்கப் பாதை வழியாகத் தொடர்பு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது . இந்நிலையில் அங்குள்ள கிறிஸ்தவர்கள் அச்சத்தில் உள்ளார்கள் . யூதர்களுக்கு அடுத்தபடியாக கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள் . அவர்கள் வீடுகளில் கல்லெறியப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள் . ஐரோப்பிய நாடுகள் தஞ்சம் அளித்தால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள் .








All the contents on this site are copyrighted ©.