2009-01-22 19:07:52

இலங்கையில் பொதுமக்கள் மீது அரசு குண்டு வீச்சு. 220109 .


இலங்கையின் வன்னிப் பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் அரசுத் தரப்பினரின் விமானப்படை குண்டு வீசியதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் . இடம் பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கிராமங்களைப் பாதுகாப்புக்குரிய இடம் எனக் கடந்த மாதம் அரசு அறிவித்திருந்தது . ஆனால் அங்கெல்லாம் அரசுக்குச் சொந்தமான விமானப்படைத் தாக்குதல் நடந்துவருவது குழப்பத்தைக் கொடுத்துள்ளது . இலங்கை அதிபர் இராஜபக்சேயிடம் ஜாப்னாவின் ஆயர் மேதகு தாமஸ் செளந்தர நாயகம் இலங்கையில் நிலையான அமைதிக்கு வழிவகுக்குமாறும் , போர் தொடுப்பதை நிறுத்துமாறும் வேண்டுகோள் வைத்துள்ளார் . வன்னிப்பகுதியில் உள்ள சுதந்திரபுரத்தில் கடும் சண்டைகள் நடந்து வந்தன . இவ்வாரம் அங்கு போடப்பட்ட குண்டுகளால் 17 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் . பலர் காயமடைந்துள்ளார்கள் . அப்பகுதியில் உள்ள தேவிபுரம் , உடையார்காடு , சுதந்திரபுரம் ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஆசியச் செய்திச்சேவை கூறுகிறது . இதனை உடனே நிறுத்தவேண்டும் என அதிபரைக் கேட்டுக்கொண்ட ஆயர் செளந்திரநாயகம் மக்களின் தேவைகளைத் தீர்க்க ஐ .நாடுகள் சபையினரோடு இணைந்து செயல்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.