2009-01-22 19:12:56

அமெரிக்க ஐக்கிய நாட்டில் மதச் சுதந்திரத்துக்கு ஆபத்து . 220109 .


அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கத்தோலிக்கர்களின் மதச் சுதந்திரத்துக்கு ஆபத்து வரும் என அங்குள்ள சட்டவல்லுநர்கள் கூறுகின்றார்கள் . அமெரி்க்காவின் முந்நாள் உச்சநீதிமன்ற நீதிபதி இராபர்ட் போர்க் என்பவர் கத்தோலி்க்க மருத்துவமனைகள் தற்பொழுது அங்கு கருச்சிதைவு செய்வதை மறுக்கின்றன . ஓரினத் திருமணத்தை கத்தோலிக்கச் சமயம் அனுமதிப்பது கிடையாது .இவை வாதத்துக்கு வரக்கூடிய நிலைமை வந்துள்ளதாக நீதிபதி போர்க் தெரிவித்துள்ளார் . மனித உரிமைச் சட்டத்தின்படி இவையெல்லாம் கட்டாயமாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கு வரக்கூடிய நிலைமை உருவாகியுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் . ஆனால் மதச் சுதந்திரம் என்ற அடிப்படையில் மதக் கோட்பாடுகளைப் பின்பற்றவேண்டிய கடமைகள் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார் . மக்கள் பொதுவாக மதக் கோட்பாடுகளைப்பற்றிச் சிந்திக்காமல் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு உல்லாச வாழ்க்கைக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக நீதிபதி இராபர்ட் போர்க் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.