2009-01-20 07:29:21

மெக்சிகோ குடும்ப மாநாட்டில் திருத்தந்தையின் பிரசன்னம் இல்லாதது மிகவும் உணரப்பட்டது- மெக்சிகோ அரசுத்தலைவர்


ஜன.19, 2009. மெக்சிகோ ஆறாவது சர்வதேச குடும்ப மாநாட்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டின் பிரசன்னம் இல்லாதது மிகவும் உணரப்பட்டதாக மெக்சிகோ நாட்டு அரசுத்தலைவர் பெலிப்பே கால்தெரோன் கூறினார்.

இம்மாநாட்டில் திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனையை கடந்த சனிக்கிழமை “லோஸ் பிநோஸ்” என்ற அரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்துப் பேசிய கால்தெரோன், திருத்தந்தை மெக்சிகோவிற்குத் திருப்பயணம் மேற்கொண்டிருந்தால் அவரைத் திறந்த மனத்துடன் வரவேற்றிருப்போம், இம்மாநாட்டில் அவரது பிரசன்னம் இல்லாதது ஒரு குறையே என்றார்.

திருப்பீடத்துடனான உறவுகளுக்கு மெக்சிகோ முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அவர் கூறியவேளை, மெக்சிகோ மீது திருத்தந்தை கொண்டுள்ள பாசத்தையும் அக்கறையையும் கர்தினால் பெர்த்தோனே தெரிவித்ததாக அரசுத்தலைவர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறியது.








All the contents on this site are copyrighted ©.