2009-01-20 07:26:25

கிறிஸ்துவின் திருத்தூதர்கள் மத்தியில் பிளவுகள் ஏற்படக் காரணமாகும் தடைகளை அகற்றுவதற்கு கிறிஸ்தவர்கள் சோர்வின்றி உழைக்க அழைப்பு - திருத்தந்தை


ஜன.19, 2009. கிறிஸ்துவின் திருத்தூதர்கள் மத்தியில் பிளவுகள் ஏற்படக் காரணமாகும் தடைகளை அகற்றுவதற்கு கிறிஸ்தவர்கள் சோர்வின்றி உழைக்குமாறு ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இஞ்ஞாயிறன்று தொடங்குகிற கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் ஜனவரி 25ம் தேதி நிறைவு பெறும் என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த வாரத்திற்கென இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, “உன் கையில் ஒன்றாயிருக்குமாறு(எசே.37,17)” என்ற தலைப்பானது கொரிய கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழு பரிந்துரை செய்தது என்றும் அறிவித்தார்.

கடும் மோதல்களும் உள்ளத்தைப் புண்படுத்தும் பிளவுகளும் நிறைந்த இன்றைய உலகை ஒப்புரவு மற்றும் அமைதியை நோக்கி நடத்திச் செல்வதற்கு கிறிஸ்தவர்களிடையேயான ஒன்றிப்பு அடையாளமாகவும் உந்து சக்தியாகவும் இருக்கும் என்பதால் இவ்வொற்றுமைக்காக அனைவரும் உருக்கமுடன் செபிக்குமாறும் அவர் விசுவாசிகளை விண்ணப்பித்தார்.








All the contents on this site are copyrighted ©.