2009-01-20 15:32:36

இந்தியாவின் பொதுநலனுக்கென நூறு கோடி ரூபாய் திட்டத்தை அறிவித்துள்ளது இந்திய காரித்தாஸ்


ஜன.20,2009. இந்தியாவின் பொதுநலனைக் கட்டிக்காப்பதில் குடிமக்களின் பங்கேற்புக்கு உதவும் நோக்கத்தில் நூறு கோடி ரூபாய் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது இந்திய கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பிறரன்பு அமைப்பான காரித்தாஸின் இந்தத் திட்டம், நாட்டின் பொது நலனுக்கென ஓர் அரசு சாரா நிறுவனம் பங்கேற்கும் மிகப் பெரிய திட்டமாக இருக்கின்றது.

நாடெங்கிலுமுள்ள ஏறத்தாழ 350 கிளை காரித்தாஸ் அலுவலகங்களின் வழியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று இந்திய காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருட்திரு வர்கீஸ் மட்டமன்னா தெரிவித்தார்.

தகவல் உரிமை பெறும் சட்டம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது, தல அரசு நிர்வாகத்தில் மக்கள் நிறுவனங்கள் பங்கேற்க உதவுவது, இன்னும் வெப்பநிலை மாற்றத்தைத் தடுக்க முன்னேற்பாடுகள், அடிப்படை வளர்ச்சிக்கான உரிமை போன்றவைகளுக்கு உதவுவதற்கு காரித்தாஸ் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரில் இச்செவ்வாயன்று நிறைவு பெற்ற இரண்டு நாள் தேசிய காரித்தாஸ் கூட்டத்தில் இத்திட்டம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. தற்சமயம் இப்பிறரன்பு அமைப்பு இந்தியாவில் 400க்கும் மேற்பட்ட திட்டங்களை நடத்தி வருகின்றது







All the contents on this site are copyrighted ©.