2009-01-20 15:34:05

அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திற்கான இரயில் போக்குவரத்து ஜூன் மாதத்தில் ஆரம்பமாகும்


ஜன.20,2009. இந்தியாவின் புகழ் பெற்ற அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திற்குப் பயணிகள் எளிதில் செல்வதற்கு உதவியாக வருகிற ஜூன் மாதத்திலிருந்து இரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரயில்வே துறை அதிகாரிகளின் அறிவிப்புப்படி, நாகபட்டிணம்- வேளாங்கண்ணி அகல இரயில்பாதை, வேளாங்கண்ணி திருத்தலத்திற்குப் பக்தர்கள் எளிதில் செல்ல உதவும் என்றனர்.

இந்தத் திட்டத்திற்கு வேளாங்கண்ணி திருத்தல நிர்வாகம் இந்திய இரயில்வேக்கு ஒரு கோடி ரூபாயைக் கொடையாக வழங்கியுள்ளது. இந்த இரயில் பாதையில் மூன்று பெரிய பாலங்கள், இருபது சிறிய பாலங்கள் ஆகியவையும் உள்ளன. வேளாங்கண்ணி இரயில் நிலைய் ஏற்கனவே தயாராக இருக்கின்றது.

முஸ்லீம்களின் புண்ணியத்தலமான நாகூருக்கும் அமைக்கப்பட்டு வரும் நாகூர் காரைக்கால் அகல இரயில் பாதை மார்ச்சில் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 








All the contents on this site are copyrighted ©.