2009-01-17 11:41:11

மெக்சிகோ குடும்ப மாநாட்டில் குடும்பம் பற்றிய பாரம்பரிய அமைப்புகளுக்குத் திருச்சபைத் தலைவர்கள் முழு ஆதரவு


ஜன.17,2009. மெக்சிகோ குடும்ப மாநாட்டில் குடும்பம் பற்றிய பாரம்பரிய அமைப்புகளுக்குத் திருச்சபைத் தலைவர்கள் தங்களது முழு ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

தந்தை, தாய், குழந்தைகள் ஆகியோரைக் கொண்ட பாரம்பரிய குடும்ப அமைப்புகளுக்கு மட்டுமே கத்தோலிக்கத் திருச்சபை ஆதரவு அளிக்கின்றது, எனினும் இந்தக் குடும்ப அமைப்பில் ஓரினப் பாலினச் சேர்க்கைத் தம்பதியரும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று இடதுசாரி அரசியல்வாதிகளும் பிற எதிர்ப்பாளர்களும் வலியுறுத்தி வருவதற்கு திருச்சபைத் தலைவர்கள் இம்மாநாட்டில் முக்கியத்துவம் கொடுக்காமல் குடும்பம் பற்றிய திருச்சபை கோட்பாடுகளை வலியுறுத்தியுள்ளனர்.

ஜனவரி 14ம் தேதி தொடங்கிய ஐந்து நாட்கள் கொண்ட இவ்வுலக மாநாட்டில் பேசிய தலைவர்கள், ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்குமிடையேயான திருமணத்தைத் திருச்சபை மதிக்கின்றது, ஏனெனில் இதுவே குடும்பத்தின் அடித்தளம் என்றும் உரைத்தனர்.

இதன் நிறைவு நாளான இஞ்ஞாயிறன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வத்திக்கானிலிருந்து ஒலி- ஒளி கருத்தரங்கு அமைப்பின் மூலம் மெக்சிகோவில் இதில் பங்கு கொள்ளும் 90க்கும் மேற்பட்ட நாடுகளின் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு உரையாற்றி ஆசீரும் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.