2009-01-16 18:36:38

மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் 19 ஆவது ஆண்டறிக்கை. 160109.


மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் 19 ஆவது ஆண்டறிக்கை 90 நாடுகளில் நடைமுறையில் மனித உரிமைகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது . வாஷிங்டனில் இருந்து வெளிவரும் இச்செய்தியில் மனித உரிமைகள் மீறப்படும் நிலைமை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது . அமெரிக்க அதிபர் புஷ் அவர்களின் ஆட்சி வெறும் போலி நடிப்பு என்றும் , ஐரோப்பிய கூட்டமைப்பு மனித உரிமைகளைக் காக்க வேண்டிய பொறுப்பை உதறிவிட்டதாகவும் வர்ணித்துள்ளது . சீனா , இந்தியா , ரஷ்யா , போன்ற நாடுகளும் மனித உரிமைகளுக்கு முதலிடம் கொடுப்பதாகக் கூறிக்கொண்டு ஆணவப்போக்குக்குரிய சர்வாதிகார ஆட்சி நடத்துவதாகக் கூறியுள்ளது .








All the contents on this site are copyrighted ©.