2009-01-16 18:33:42

அத்லீமினா சந்திப்புக்காக வத்திக்கான் வந்துள்ள ஈரான் நாட்டு ஆயர்களை இந்த வெள்ளிக்கிழமை நண்பகலில் திருத்தந்தை வரவேற்றுப் பேசினார் . 160109 .


டெஹ்ரானின் கல்தேயத் திருச்சபைப் பேராயர் ரம்ஷி கார்மோவையும் , மற்றும் ஆர்மீனியத் திருச்சபை ஆயர்கள் ,இலத்தீன் ஆயர்களையும் வரவேற்று அவர்கள் கலாச்சாரத்தின் வளப்பத்தைத் திருத்தந்தை பாராட்டினார் . ஈரான் நாட்டு மக்களுக்கு தம் ஆசியை வழங்கினார் . ஈரான், மேலை நாடுகளுக்கும் ஆசியாவுக்கும் பாலமாக இருப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை . கிறிஸ்தவம் ஈரானில் முற்காலத்தில் தழைத்தோங்கியிருந்ததாகத் திருத்தந்தை கூறினார் . அந்நாட்டில் பணிசெய்யும் குருக்கள் , துறவியருக்கும் தம் வாழ்த்துக்களையும் நன்றியையும் திருத்தந்தை தெரிவித்தார் . அவர்களது பணியின் முக்கியம் பற்றித் பாராட்டிப்பேசினார் . அங்கு பணிசெய்யும் காரித்தாஸ் போன்ற தொண்டு நிறுவனங்களுக்கும் திருத்தந்தை தம் நன்றிகளைத் தெரிவித்தார் . வந்திருந்த ஆயர்கள் ஈரானில் உள்ள விசுவாசிகளை விசுவாசத்தில் உறுதியாக இருக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார் . அங்குள்ள பிற சமூகத்தாரோடு நல்லுறவு கொள்ளுமாறும், ஈரானின் பண்பாட்டை போற்றி , கலந்து உரையாடுமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார் . குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . ஈரானிய மக்களோடு நெருக்கமான பாசம் கொண்டுள்ளதாக மக்களுக்குக் கூறுமாறு விழைந்து , திருத்தூதர் பவுலின் ஜூபிலி ஆண்டின் சிறப்பு ஆசியை ஆயர்களுக்கும் மக்களுக்கும் அளித்தார் திருத்தந்தை .








All the contents on this site are copyrighted ©.