2009-01-15 13:14:01

ஜனவரி 16 நற்செய்தி மாற்கு 2, 1-12


இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம் மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றார். அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர் கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ' என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர். உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து அவர்களை நோக்கி உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்? முடக்குவாதமுற்ற இவனிடம் ' உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதா? எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்பதா? எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி நான் உனக்குச் சொல்கிறேன் நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ என்றார். அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார்.








All the contents on this site are copyrighted ©.