2009-01-15 16:40:49

காவல்துறை மேலதிகாரிகளை வரவேற்றுப் பேசினார் திருத்தந்தை. 1501.




இந்த வியாழன் நண்பகலில் காவல் துறை மேலதிகாரிகள் வத்திக்கான் மாளிகையில் திருத்தந்தையைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர் . அவர்களைச் சந்திப்பது தமக்கு மிக்க மகிழ்ச்சி தருவதாகத் திருத்தந்தை தெரிவித்து வரவேற்றுப்பேசினார் . காவல் துறை மேலர்களின் இயக்குநராகப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் டாக்டர் ஜூலியோ கல்லினோ திருத்தந்தைக்குத் தொடக்கத்தில் அனைவர் சார்பாகவும் வாழ்த்துக்கூறினார் . அவருக்கு நன்றி கூறி அவரையும் , காவல்படைத் தலைவர் அந்தோனியோ மங்கானெல்லியையும் மற்றோரையும் வரவேற்றுப் பாராட்டி நல்லாசி கூறினார், திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .



பாதுகாப்புப் பிரிவினரை பலமுறை தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் பார்க்கக் கூடிய வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை . பணி நேரம் மாறி மாறி வருவதால் குடும்பத்தினருக்குச் சிரமமாக இருக்கும் . குடும்பம் முழுவதுமே பணியில் பங்கேற்றுள்ளதாகத் திருத்தந்தை தெரிவித்தார் . புத்தாண்டை நம்பிக்கையோடு எதிர்நோக்குமாறு திருத்தந்தை கூறினார் .தந்தையாகிய கடவுள் உலகுக்குக் கொடுத்துள்ள மிகப் பெரிய கொடை இயேசு கிறிஸ்து . கிறிஸ்து மட்டுமே நம் இதயங்களை அமைதியால் நிரப்பி , உலகை நீதியாலும் அன்பாலும் ஆட்சிபுரியமுடியும் எனத் திருத்தந்தை கூறினார் . அவர்களுடைய பணிகளை பாசத்தோடும் செபத்தோடும் செய்யுமாறு கேட்டுக்கொண்டார் . திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் புனிதத்தில் வளர அழைக்கப்பட்டுள்ளோம் எனக்கூறி புத்தாண்டு வாழ்த்துக்களைப் புதுப்பித்து , தமது அப்போஸ்தலிக்க ஆசியை வந்திருந்தோருக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.