2009-01-12 09:57:42

வன்முறை தன்னிலே தீமையானது, அதிலும் அது மனிதாபிமான நிவாரண உதவிகளைத் தடை செய்யும் போது அதிகக் கொடுமையானது, லிவர்பூல் பேராயர்


ஜன.10,2009. வன்முறை தன்னிலே தீமையானது, அதிலும் அது மனிதாபிமான நிவாரண உதவிகளைத் தடை செய்யும் போது அதிகக் கொடுமையானது என்று பிரிட்டனின் லிவர்பூல் பேராயர் பாட்ரிக் கெல்லி கூறினார்.

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையில் காஸாவில் தற்போது நடைபெறும் மோதலுக்கு ஆழமான மூல காரணங்கள் இருந்தாலும் தற்சமயம் அனைத்துவிதமான வன்முறைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

கானடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, அமெரிக்க ஐக்கிய குடியரசு ஆகிய நாடுகலின் ஆயர் பிரதிநிதிகள் குழு, நேற்று முதல் ஒருவாரப் பயணத்தை மத்திய கிழக்குப் பகுதியில் மேற்கொண்டு வருகிறது.








All the contents on this site are copyrighted ©.