2009-01-12 09:56:43

பாதுகாப்புக்கும் அமைதிக்குமான தீர்வுகளைத் திறப்பதற்கானப் பாதைக்கு உரையாடல் கலாச்சாரம் தேவைப்படுகின்றது, லெபனனுக்கான திருப்பீடத் தூதுவர்


ஜன.10,2009. லெபனன், அரசியல் மற்றும் பிரிவினைவாத மோதல்களைப் அதிகரிப்பதற்கானத் தளமாக இருக்கும்வேளை, பாதுகாப்புக்கும் அமைதிக்குமான தீர்வுகளைத் திறப்பதற்கானப் பாதைக்கு உரையாடல் கலாச்சாரம் தேவைப்படுகின்றது என்று லெபனனுக்கான திருப்பீடத் தூதுவர் பேராயர் லூயிஜி காத்தி கூறினார்.

லெபனன் அரசுத்தலைவர் மிஷேல் ஸ்லைமான் மற்றும் தூதரகக் குழுவுக்குத் தனது புத்தாண்டு செய்தியை வழங்கிய பேராயர் காத்தி, சில குழுக்கள் தங்களது தேசிய தனித்துவத்திற்கான அச்சுறுத்தலை எதிர் கொள்வது உட்பட அரசுத்தலைவர் எதிர்நோக்கும் சில முக்கிய சவால்களைச் சுட்டிக் காட்டினார்.

உந்நாட்டு மற்றும் வெளிநாட்டு குழுக்களின் மோதல்கள், அவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அரசியல் கோஷ்டிகள் ஆகியவை பற்றியும் குறிப்பிட்ட அவர், அனைத்து கட்சிகளிடையே ஒப்புரவு ஏற்பட அரசுத்தலைவர் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டியதோடு இம்முயற்சிகளுக்கு ஒருநாள் நிச்சயம் பலன் கிடைக்கும் என்றார்.

லெபனனில் 12 கிறிஸ்தவ சபைகள் உட்பட 18 பெரிய சமயப் பிரிவுகள் உள்ளன. அந்நாட்டின் ஏறத்தாழ 35 இலட்சம் மக்களில் ஏறத்தாழ 33 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.








All the contents on this site are copyrighted ©.