2009-01-12 14:58:20

ஜனவரி 13 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


ஜனவரி 13 புனித ஹிலாரியின் விழா. கி.பி.315 முதல் 365 வரை வாழ்ந்த ஆயராகிய புனித ஹிலாரி, கிறிஸ்து பற்றிய உண்மையை எதிர்த்தவர்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசியவர். இதன் காரணமாக இவர் நாடும் கடத்தப்பட்டார். இப்படி வாழ்ந்த மூன்றாண்டுகளில் நேரத்தை வீணாக்காமல் மூவொரு கடவுள் பற்றிய அழகிய நூலையும் இவர் எழுதினார்.

1547 – ஏற்புடைமை பற்றிய விதிமுறையை திரிதெந்தின் பொதுச்சங்கம் அங்கீகரித்தது.

1610 – கலிலேயோ கலிலெய், கலிஸ்டோ என்ற ஜூபிட்டர் கிரகத்தின் நான்காவது விண்கோளைக் கண்டுபிடித்தார்.

1958 – அணுப்பரிசோதனையைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை 43 நாடுகளின் ஒன்பதாயிரம் விஞ்ஞானிகள் இணைந்து ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் சமர்ப்பித்தனர்.

1948 – இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக காந்திஜி உண்ணாவிரதம் தொடங்கினார்







All the contents on this site are copyrighted ©.