2009-01-12 15:25:56

கிறிஸ்தவர்கள் தங்கள் பொறுப்புக்களையும் கடமைகளையும் அறிந்து சுதந்திரமாக ஓட்டளிக்குமாறு தென்னாப்ரிக்க ஆயர் பேரவைத் தலைவர் அழைப்பு


ஜன.12,2009. தென்னாப்ரிக்காவில் வருகிற ஏப்ரலில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள வேளை, கிறிஸ்தவர்கள் தங்கள் பொறுப்புக்களையும் கடமைகளையும் அறிந்து சுதந்திரமாக ஓட்டளிக்குமாறு அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் பூட்டி த்ல்ஹாகாலே கூறினார்.

வருகிற தேசியத் தேர்தல்களுக்கு மக்களைத் தயாரிக்கும் நோக்கத்தில் மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்ட ஜொகானஸ்பர்க் பேராயர் பூட்டி, ஓட்டளிப்பது என்பது கிறிஸ்தவர்களுக்கு நாட்டின் மீதான அன்பையும் அக்கறையையும் காட்டுவதாக இருக்கின்றது என்று கூறியுள்ளார்.

தென்னாப்ரிக்காவில் 1994 ல் நிறவெறிக் கொள்கை முடிவுக்கு வந்த பின்னர் தற்போதைய ஏப்ரல் பொதுத் தேர்தல்கள், நான்காவது முறையாக நடைபெறும் பலஇனத்தவர் பங்கு கொள்ளும் தேர்தலாகும்.








All the contents on this site are copyrighted ©.