2009-01-09 19:52:36

பொருளாதாரச் சீர்குலைவைச் சரிசெய்யமுடியும். மெட்ராப்பாலிட்டன் கிரில். 0901.


நல்ல மதிப்பீடுகள் பொருளாதாரச் சீர்குலைவைச் சரிசெய்யமுடியும் என்கிறார் . முந்நாள் இரஷ்யப் பிதாப்பிதா 2 ஆம் அலெக்சி சென்றமாதம் 5 ஆம் தேதி காலமானதால் மெட்ராப்பாலிட்டன் கிரில் இடைக்காலத்தில் பிதாப்பிதாவாகச் செயல் ஆற்றிவருகிறார் . ஜூலியன் நாட்காட்டிப்படி கிறிஸ்துமஸ் விழா இரஷ்யாவில் இம்மாதம் 7 ஆம் தேதி கொண்டாடப்பட்டது . மீட்பர் கிறிஸ்து தேவாலயத்தில் விழாக் கொண்டாடப்பட்டது . 3000 பேர் பங்கேற்ற திருப்பலியில் இரஷ்யாவுக்கான் வத்திக்கான் திருப்பீடத் தூதுவர் பேராயர் அந்தோனியோ மென்னினியும் , இரஷ்ய நாட்டுத் தலைவர் டிமிட்ரி மெத்வெதேவும் கலந்து கொண்டனர் . அதுபோது பொருளாதாரம் கடவுள் அருளால் நல்ல நிலைக்குத் திரும்பும் என நம்புவதாக மெட்ராப்போலிட்டன் கிரில் தெரிவித்தார் .








All the contents on this site are copyrighted ©.