2009-01-09 19:50:26

கேரள அரசு கருணைச் சாவை சட்டமயமாக்க முயல்கிறது .090109 .


கேரள அரசு கருணைச் சாவை சட்டமயமாக்க முயல்வது தேர்தல் கால விளம்பரம் என்கின்றார் சத்யதீபம் இதழ் ஆசிரியர் தந்தை பால் தெலக்காட் .

கேரளத்தில் மார்க்சிஸ்ட் சார்புடைய அரசு ஆட்சி நடத்தி வருகிறது . கருணைச் சாவைச் சட்டப்படி சரியெனக் கூறி , தற்கொலைச் சாவை குற்றம் அற்றதாக்க முயல்கிறது . இந்தச் சட்டம் நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெறவோ , வாழ்வை தம் சொந்த விருப்பப்படி முடித்துக் கொள்ளவோ அனுமதி அளிக்கிறது . இதைக் கத்தோலிக்கத் திருச்சபை உயிர்களைப் பறிப்பதற்குச் சட்டப்படி அனுமதி தருவதாகவும் எனக் கூறி எதிர்த்து வருகிறது . முந்நாள் உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ஐயர் தலைமையில் கேரளத்தில் நடந்துவரும் சட்டத் திருத்தக் குழுவின் முன் விசாரணைக்கு வந்துள்ளது இச்சட்டம் . வாழ்வு புனிதமானது என்றாலும் தாங்கமுடியாத வேதனையின் போது வாழ்வுக்கு அர்த்தம் இல்லாது போய்விடுகிறது என மார்க்சிய சார்பு கேரள ஆளும் கட்சி கூறியுள்ளது . இது தேர்தல் காலத்துத் தந்திரம் என்கிறார் தந்தை தெலக்கட் .








All the contents on this site are copyrighted ©.