2009-01-07 13:56:41

ஐரோப்பாவில் மக்கள் தொகை விகிதம் கவலைதரும் வகையில் குறைந்து வருகிறது - செக் கர்தினால்


ஜன.07,2009. ஐரோப்பாவில் மக்கள் தொகை விகிதம் கவலைதரும் வகையில் குறைந்து வருவதாகவும் உலகமயமாக்கல் கொள்கையின் பாதையில் ஐரோப்பா மேலும் இஸ்லாம் மயமாகி வருவதாகவும் செக் கர்தினால் மிலோஸ்லாவ் வுல்க் கூறினார்.

இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளில் தான் முழுநம்பிக்கை கொண்டுள்ளதாக உரைத்த கர்தினால் ஒருவர் கடவுளின் வழியில் நடக்கவில்லை என்பதற்காக அவரின் உயிரைப் பறிக்கும் இஸ்லாமிய தீவிரவாதப்போக்கு எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனவும் தெரிவித்தார்.

குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளத் தயங்கும் ஐரோப்பியர்களையும் அதிகக் குழந்தைச் செல்வங்களைக் கொண்டிருக்கும் இஸ்லாமியக் குடும்பங்களையும் ஒப்பிட்டுப் பேசிய கர்தினால் வுல்க், ஒருகாலத்தில் ஐரோப்பா இஸ்லாமிய மயமாகும் வாய்ப்பு உள்ளது என்றார்.

கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஐரோப்பியர்கள் தயங்கி வரும் வேளையில் ஐரோப்பிய இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை வாழ்ந்து காட்டுகிறார்கள் எனவும் அவர் கூறினார்.

ஐரோப்பியர்களுக்கு ஒருவித ஆன்மீகப் புதுப்பித்தல் தேவைப்படுகின்றது என மேலும் வலியுறுத்தினார் செக் நாட்டின் ப்ராக் கர்தினால் வுல்க்.








All the contents on this site are copyrighted ©.