2009-01-06 15:05:51

திருத்தந்தையின் மறையுரை - திருக்காட்சி விழா . 060109


இலத்தீன் பரம்பரையில் திருக்காட்சி விழா இயேசுக் கிறிஸ்து யூதர் அல்லாத புற இனத்தவர்க்கு தம்மையே வெளிப்படுத்திய திருவிழா என்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . கீழைத் திருச்சசபையில் இயேசு திருமுழுக்குப் பெற்ற திருவிழா . அதுபோது தூய ஆவியானவர் இயேசுக் கிறிஸ்து கடவுளின் ஒரே திருமகன் எனச் சான்று பகன்றார் . திருத்தூதர் யோவான் இயேசுக் கிறிஸ்து கானா ஊரில் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய அற்புத நிகழ்ச்சியின் போது தம்முடைய மாட்சியை வெளிப்படுத்தியதையும் அவருடைய சீடர்கள் அவரில் நம்பிக்கை கொண்டதையும் திருக்காட்சி விழாவாகக் கருதுகிறார் . நாம் ஒவ்வொரு நாளும் திருக்காட்சியை இயேசுவின் திருப்பலியில் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் . தம்முடைய மாட்சிமையை அவர் அப்ப இரச வடிவில் மறைமுகமாக வெளிப்படுத்துகிறார் . இந்த 2009 ஆண்டு நாம் விஞ்ஞானி கலிலேயோ தொலைக்காட்சிக் கருவியைக் கண்டுபிடித்ததன் 400 ஆம் ஆண்டைக் கொண்டாடுகிறோம் . நட்சத்திரங்களைத் தெளிவாகக் காண உதவும் தொலைக்காட்சி பற்றி விழா எடுக்கும் நாம் ஞானிகளுக்கு முக்கிய வழிகாட்டியாக இருந்த வால் நட்சத்திரம் பற்றியும் சிந்திக்கிறோம் . அவர்கள் வானை ஆராய்ச்சிசெய்யக்கூடிய வான சாஸ்திரிகளாக இருந்திருக்கலாம் . அவர்கள் விண்ணில் புதிய நட்சத்திரத்தை கண்டபோது அது ஒரு மன்னரின் பிறப்பைக் குறிப்பதாகக் கருதினார்கள் . திருநூல்களின் படி அவர் யூதர்களின் வேந்தராக இருப்பார் எனக் கண்டறிந்தனர் . வானில் ஒரு புரட்சியையே உருவாக்கியதாக நாம் மத்தேயு நற்செய்தியில் காண்கிறோம் . கிறிஸ்து தம்மையே அன்பாக வெளிப்படுத்தியைதை நாம் உணர்வோம் . திருத்தூதர் பவுல் கூறுவதுபோல நாம் இயேசுவின் வருகையால் விடுதலை பெற்றப் படைப்புக்கள் . இயேசு நம்மில் ஒருவராகப் பிறந்ததால் அவர் நம் சகோதரராக , நண்பராக இருக்கிறார் .கிறிஸ்துவே படைப்பின் பல்லிசையும் , மொத்த உருவமும் ஆவார் எனத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் மறையுரை வழங்கினார் .








All the contents on this site are copyrighted ©.