2009-01-05 09:18:09

ஜனவரி 06 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


கி.பி.361ஆம் ஆண்டிலிருந்து திருகாட்சி விழாக் கொண்டாடப்படத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. மூன்று கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவைத் தரிசித்ததை இவ்விழா நாளில் மேற்கத்திய திருச்சபைகள் கொண்டாடுகின்றன.

1535 பெரு நாட்டு லீமா நகரம் பிரான்சிஸ்கோ பிஸ்சரோ என்பவரால் அமைக்கப்பட்டது.

1622 திருத்தந்தை 15ம் கிரகரி விசுவாசப்பரப்பு பேராயத்தை உருவாக்கினார்.

1873 திருத்தந்தை 9ம் பத்திநாதர் அர்மேனியாவில் திருச்சபை என்ற அப்போஸ்தலிக்கத் திருமடலை வெளியிட்டார்.

1912 நியு மெக்சிகோ, அமெரிக்க ஐக்கிய குடியரசின் 47வது மாநிலமானது







All the contents on this site are copyrighted ©.