2009-01-03 15:49:58

சீனாவில் மறைப்பணியாற்றும் கத்தோலிக்க ஆயர்கள் தைரியமுடன் மறைப்பணியாற்ற ஹாங்காங் கர்தினால் சென் அழைப்பு


ஜன.03,2009. சீனாவில் மறைப்பணியாற்றும் கத்தோலிக்க ஆயர்கள் திருச்சபைக்கானத் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் தைரியமுடன் செயல்படுமாறு ஹாங்காங் கர்தினால் ஜோசப் சென் செ-கியும் கூறியுள்ளார்.

2009ம் ஆண்டில் ஓய்வு பெறவிருக்கும் ஹாங்காங் கர்தினால் யூக்கா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நெருக்கடியான இக்காலக் கட்டத்தில் ஆயர்கள் தேர்ந்து கொள்ளும் மறைப்பணி முறையானது திருச்சபைக்கு உயிரூட்டம் அளிக்கும் அல்லது திருச்சபையை நீண்டகாலத்திற்குத் துன்புற வைக்கும் என்று குறிப்பிட்டார்.

வரலாறு சீன ஆயர்கள் மீது வைத்துள்ள பொறுப்புக்களைச் செயல்படுத்துவதில் அவர்கள் பயப்படக்கூடாது என்றும் கர்தினால் சென் கேட்டுள்ளார்.

கிறிஸ்தவத்தின் முதல் மறைசாட்சி புனித ஸ்தேவானைப் பின்பற்றி நடக்குமாறும் ஆயர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவில் அரசு அங்கீகாரம் பெற்ற கத்தோலிக்கத் திருச்சபை 1958ல் தனது சொந்த ஆயர்களைத் திருநிலைப்படுத்தத் தொடங்கியது. தற்சமயம் அத்தகைய ஆயர்கள் சுமார் 170 பேர் உள்ளனர்







All the contents on this site are copyrighted ©.