2009-01-02 16:20:14

புனித பெர்நதெத் சுபீரஸ் பற்றிய திரைப்படம் .020109 .


புனித பெர்னதெத் இன்றைய உலகுக்கு இயைந்த பொருத்தமான புனிதை என்கின்றனர் இந்துமத திரைப்படத் தயாரிப்பாளர்கள் . சென்ற டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி புனித பெர்நதெத் பற்றிய திரைப்படம் வெளிவந்தது . அதை இயக்கியுள்ள வி.ஆர் . கோபிநாத் புனிதையின் அடக்கமான வாழ்வும் , குறிக்கோளுக்காக வாழ்ந்த விதமும் இறைவனின் அழைப்புக்கு பிரமாணிக்கமாக இருந்ததும் இன்றைய சமுதாயத்துக்கு முக்கியமான நற்செய்தியைக் கூறுவதாகத் தெரிவித்துள்ளார் . சாதாரண மனிதரும் புனித பெர்நதெத் போன்று உலகில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கோபிநாத் கூறியுள்ளார் . இந்தத் திரைப்படம் வெளிவர ஹைதராபாத் பேராயர் ஜோஜி மாராம்புடி உதவிகள் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளது . 2008 ஆண்டில் அன்னை மரியாள் லூர்து நகரில் பெர்நதெத்துக்குக் காட்சி கொடுத்ததன் 150 ஆவது ஆண்டையொட்டி இத்திரைப்படம் தயாரானது . ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட புனித பெர்நதெத் திரைப்படம் தமிழில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது .








All the contents on this site are copyrighted ©.